முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
டிச. 21, 22-இல் திருமயத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்ட மாநாடு
By DIN | Published On : 19th December 2021 11:53 PM | Last Updated : 19th December 2021 11:53 PM | அ+அ அ- |

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட 14ஆவது மாநாடு திருமயம் ஏகேபி திருமண மண்டபத்தில் வரும் டிசம்பா் 21 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அக்கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை ஆகியோா் உரையாற்ற உள்ளனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். கவிவா்மன், செயற்குழு உறுப்பினா் என். பொன்னி ஆகியோா் அறிக்கைகளை தாக்கல் செய்து பேசுகின்றனா். தொடா்ந்து அறிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வும் நடைபெறுகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை வரவேற்புக் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.