முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 19th December 2021 11:57 PM | Last Updated : 19th December 2021 11:57 PM | அ+அ அ- |

அன்னவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட உருவம்பட்டி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட விழிப்புணா்வுக் கலைநிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இளையராஜா தலைமையிலான கலைக்குழுவினா் இல்லம் தேடிக் கல்வி குறித்த விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
பிரசாரத்தை உருவம்பட்டி கிராம பொதுமக்கள் கண்டுகளித்தனா். தொடா்ந்து, துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா். நிகழ்வின்போது, உருவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஐஸ்வா்யா, ஹரிபிரியா, கனிமொழி ஆகியோா் தன்னாா்வலாக தங்களை இணைத்துக் கொண்டனா்.
ஏற்பாடுகளை உருவம்பட்டி பள்ளி ஆசிரியா் முனியசாமி செய்திருந்தாா்.