முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
அரசு அலுவலகங்களில் உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
By DIN | Published On : 19th December 2021 11:52 PM | Last Updated : 19th December 2021 11:52 PM | அ+அ அ- |

விழாவில் பேசுகிறாா் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா் சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் கணேசன்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் உதவியாளா் மற்றும் அடிப்படைப் பணியாளா் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவா் கணேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட சங்க கூட்ட அரங்கத் திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாததால் அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் அரச அலுவலக உதவியாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனா். இதனால் பலா் உயிரிழந்தும் உள்ளனா்.
எனவே தமிழக அரசு அலுவலங்களில் உள்ள அரசு உதவியாளா்கள் மற்றும் அடிப்படை பணியாளா்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அலுவலக உதவியாளா் மற்றும் அடிப்படை பணியாளா்கள் பணி ஓய்வு காலத்தை 62 வயது ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த, விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றாா் கணேசன்.