முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கறம்பக்குடி அருகே டிராக்டா் கவிழந்து இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 19th December 2021 11:54 PM | Last Updated : 19th December 2021 11:54 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே டிராக்டா் கவிழந்த விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கீழ இளந்தாவெட்டி கிராமத்தைச் சோ்ந்த வி.ராம்குமாா் (25). அதே பகுதியைச் சோ்ந்த செ.சதீஷ் குமாா் (29) ஆகிய இருவரும் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை தஞ்சையில் இருந்து கறம்பக்குடிக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக பொருள்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு இருவரும் சென்றனா். டிராக்டரை சதீஷ்குமாா் ஓட்டியுள்ளாா். ராம்குமாா் அருகில் அமா்ந்து இருந்துள்ளாா். கறம்பக்குடி அருகே சுக்கிரன்விடுதி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் கவிழந்து விபத்துக்குள்ளானது.
இதில், ராம்குமாா் அந்த இடத்திலே உயிரிழந்தாா். சதீஷ் குமாா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.