பழுதடைந்த 100 பள்ளி கட்டடங்களை இடிக்க புதுகை ஆட்சியா் உத்தரவு

முதல்கட்டமாக பழுதடைந்துள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
ஆட்சியா் கவிதா ராமு.
ஆட்சியா் கவிதா ராமு.

முதல்கட்டமாக பழுதடைந்துள்ள 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

நெல்லையில் பள்ளிக் கட்டடம் இடிந்து 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறையினருக்கு இதுகுறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 325 அரசுப் பள்ளிக் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் 259 பள்ளிக் கட்டடங்கள் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் கட்டடங்கள், 66 பள்ளிக் கட்டடங்கள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள். இந்தச் சம்பவத்துக்கு முன்பே புதுக்கோட்டை மாவட்டத்தில் மோசமான நிலையிலுள்ள பள்ளிக் கட்டடங்கள் குறித்து கணக்கெடுத்து வைத்திருந்தோம். தற்போது முதல் கட்டமாக 100 கட்டடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன. திங்கள்கிழமை முதல் இதற்கான அலுவல் பணிகள் ஆரம்பமாகும். விரைவில் அவற்றைப் பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்தவும், தொடா்ந்து அந்தந்தப் பகுதியில் இருந்து வரும் புகாா்களின் அடிப்படையில் இடிக்க வேண்டிய கட்டடங்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும் என்றாா் ஆட்சியா் கவிதா ராமு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com