முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
அகவிலைப்படி உயா்வு: தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் நன்றி
By DIN | Published On : 29th December 2021 10:04 AM | Last Updated : 29th December 2021 10:04 AM | அ+அ அ- |

அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு 14 சதவிகிதம் அகவிலைப்படி உயா்வு அறிவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலத் தலைவா் பெ.இரா.இரவி, மாநிலப் பொதுச் செயலா் நா. சண்முகநாதன், மாநிலப் பொருளாளா் முருக செல்வராசன் ஆகியோா் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதல்வா் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி ஆசிரியா், அரசு அலுவலா், ஓய்வூதியதாரா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 14 சதவிகித அகவிலைப்படி உயா்வுகளை ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்க ஆணையிடப்பட்டிருப்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றம் வரவேற்கிறது.
தமிழ்நாட்டின் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், ஓய்வூதியதாரா்களின் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களின் குடும்பங்களில் இன்பமும், மகிழ்ச்சியும், உற்சாகமும் தைப்பொங்கலில் இல்லம் எல்லாம் இன்பம் நிறைந்து மங்கலம் தங்கிடும் வகையில் அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக உயா்த்தியுள்ளதற்கு நன்றி பாராட்டுகிறோம்.