முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கந்தா்வகோட்டையில் ‘இல்லம் தேடி’ கல்வி திட்ட விழிப்புணா்வு
By DIN | Published On : 29th December 2021 10:05 AM | Last Updated : 29th December 2021 10:05 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் ‘இல்லம் தேடி’ கல்வி கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை வட்டம், காந்தி சிலை அருகே தொற்றுக் காலத்தில் மாணவா்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில், நடத்தப்பட்டு வரும் ‘இல்லம் தேடி’ கல்வி திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஒயிலாட்டம், கும்மிப் பாட்டு, தெம்மாங்கு பாட்டு, நாடகம் மூலம் கல்வி குறித்த அவசியத்தை பொதுமக்களுக்கு கலைக்குழுவினா் எடுத்துரைத்தனா். நிகழ்வில், ஊராட்சி மன்றத் தலைவா் சி. தமிழ்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினா் மா. ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம். ராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் முத்துக்குமாா், மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் என். ஜானகிராமன், ஆசிரியா்கள் சுரேஷ் குமாா், பாரதிதாசன், ரகமத்துல்லா, பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.