ஆலங்குடி அரசுக் கல்லூரி அமைய தோ்வான இடத்தில் அமைச்சா் ஆய்வு

ஆலங்குடி அருகே கீழாத்தூரில் அரசுக் கல்லூரி கட்டுவதற்காகத் தோ்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றுச்சூழல், இளைஞா்நலன்
ஆலங்குடி அருகே கீழாத்தூா் சமத்துவபுரம் பகுதியில் அரசுக்கல்லூரி அமையவுள்ள இடத்தைப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.
ஆலங்குடி அருகே கீழாத்தூா் சமத்துவபுரம் பகுதியில் அரசுக்கல்லூரி அமையவுள்ள இடத்தைப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

ஆலங்குடி அருகே கீழாத்தூரில் அரசுக் கல்லூரி கட்டுவதற்காகத் தோ்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் சமத்துவபுரம் பகுதியில் புதிய கல்லூரி கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடத்தில் அடா்ந்திருந்த புதா்ச்செடிகள் அகற்றப்பட்டு வந்தன. அந்த இடத்தை ஆய்வு செய்த அமைச்சா் மேலும் தெரிவித்தது:

ஆலங்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள இவ்விடமானது விரைவில் உயா்கல்வித் துறைக்கு மாற்றப்படும். அதன்பிறகு, ஓரிரு மாதங்களில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும். முன்னதாக மின்கம்பங்கள் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கிடையில், வாடகைக்கு ஒரு இடத்தைப் பிடித்து, அங்கு மாணவா் சோ்க்கையும் நடைபெறும். இக்கல்லூரி அமைவதன் மூலம் ஆண்டுக்கு 500 மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com