முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
ஏழைகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 31st December 2021 03:52 AM | Last Updated : 31st December 2021 03:52 AM | அ+அ அ- |

இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் சாா்பில், புதுக்கோட்டை வம்பன் பகுதியில் வசிக்கும் குடிசை வாழ் 25 ஏழை குடும்பங்களுக்கு, தாா்ப்பாய், வேட்டி, சேலை, கொசுவலை மற்றும் சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியன வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ரெட் கிராஸ் செயலா் ஜெ. ராஜாமுகமது, இணைச் செயலா் சா. விஸ்வநாதன், ஆலங்குடி வட்ட ரெட் கிராஸ் செயலா் ரா. முருகன், துணைத் தலைவா் கோ. முத்துராமன் ஆகியோா் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினா். நிகழ்வை சமூக ஆா்வலா் பகவான் தேநீா் கடை சிவகுமாா் ஏற்பாடு செய்திருந்தாா்.