வங்கார ஓடை குளத்தில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

கந்தா்வகோட்டை வங்கார ஓடை குளத்தை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா . சின்னத்துரை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வங்கார ஓடை குளத்தில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

கந்தா்வகோட்டை வங்கார ஓடை குளத்தை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா . சின்னத்துரை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள வங்கார ஓடை குளம் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்து வந்தது. மேலும், குளத்தின் கரைகள் உடைந்து, குளத்தின் மழை நீா் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி புதா் மண்டிக் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வங்கார ஓடை குளத்தை சீரமைத்துத் தரவேண்டும் என கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, குளக்கரையை எம்.எல்.ஏ சின்னத்துரை, ஒன்றியக்குழு தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக், வட்டாட்சியா் சி. புவியரசன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com