பிப். 11-ல் திருநல்லூர் ஜல்லிக்கட்டு: முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி

திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி முகூர்த்தகால் திங்கள்கிழமை நட்டு வைத்து முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.
திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி நடைபெற்ற முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி.
திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி நடைபெற்ற முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி.

திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி முகூர்த்தகால் திங்கள்கிழமை நட்டு வைத்து முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு வரும் பிப்ரவரி 11-ல் நடைபெறுகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடு பணிகளான வாடிவாசல், பார்வையாளர் மாடம், அரசு அலுவலர்கள் மாடம், பத்திரிக்கையாளர் மாடம், காளைகள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடக்க விழாவிற்கு முன்னேற்பாடு பணிக்கான மூத்த கால் நடும் விழா திங்கள்கிழமை காலை ஜல்லிக்கட்டு திடலில் நடைபெற்றது. 

இதில் மாவட்ட திமுக இளைஞரணி துணை செயலாளர்எம். பழனியப்பன், கோயில் நிர்வாகி எஸ். செந்தில் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com