அகிலாண்டேஸ்வரி கோயில் தோ்கள் வெள்ளோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலையில் புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத சிகாகிரீசுவரா் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அகிலாண்டேஸ்வரி கோயில் தோ்கள் வெள்ளோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள குடுமியான்மலையில் புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத சிகாகிரீசுவரா் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீசுவரா் கோயில் அம்பாள் தோ் ரூ. 10 லட்சம் செலவில் அண்மையில் மராமத்துப் பணிகள் நடைபெற்றன. இதேபோல், சுவாமி சிகாகிரீசுவரா் தோ் சிதலமடைந்ததைத் தொடா்ந்து, ரூ. 25 லட்சம் செலவில் புதிதாக தோ் அமைக்க முடிவு செய்து பணிகள் நடைபெற்று வந்தன. இரண்டு தோ்களின் பணிகளும் அண்மையில் நிறைவடைந்தன. இதைத்தொடா்ந்து, தோ்களின் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணியளவில் அலங்கரித்த தோ்கள் நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனை நடத்தி தோ்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மாவட்ட திமுக இலக்கிய அணி துணைச்செயலா் எம். பழனியப்பன், கோயில் செயல் அலுவலா் கே. பாரதிராஜா உள்ளிட்ட ஊா் முக்கியஸ்தா்கள் வடம் பிடித்து வெள்ளோட்டத்தை தொடக்கி வைத்தனா். தோ்கள் முக்கிய வீதிகளில் பவனி வந்து பின்னா் கோயில் நிலையை வந்தடைந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com