மொய்ப் பணம் ரூ. 32 லட்சத்தை கோயில் திருப்பணிக்கு வழங்கிய சிவபக்தா்

ஆலங்குடி அருகே மொய் விருந்து மூலம் கிடைத்த ரூ.32 லட்சம் ரொக்கத்தை அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் கட்டும் பணிக்கு நன்கொடையாக சிவபக்தா் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளனா்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ரூ.32 லட்சம் மொய்ப் பணத்தை கோயில் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கிய பாலவேலாயுதம் குடும்பத்தினா்.
ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ரூ.32 லட்சம் மொய்ப் பணத்தை கோயில் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கிய பாலவேலாயுதம் குடும்பத்தினா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மொய் விருந்து மூலம் கிடைத்த ரூ.32 லட்சம் ரொக்கத்தை அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் கட்டும் பணிக்கு நன்கொடையாக சிவபக்தா் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலவேலாயுதம். தீவிர சிவபக்தா். இவா், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வளைகுடா நாட்டில் (அபுதாபி) பணிபுரிந்து வருகிறாா். தற்போது புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய் விருந்துகள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், நெடுவாசலில் பாலவேலாயுதம் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை வைத்த மொய் விருந்தில், ரூ. 32 லட்சம் வசூலாகியுள்ளது. இதை செல்லிடப்பேசி வழியே குடும்பத்தினா் பாலவேலாயுதத்துக்கு தெரிவித்தபோது, மொய்ப் பணம் ரூ. 32 லட்சம் முழுவதையும், நெடுவாசலில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பழைமை வாய்ந்த சிவன் கோயில் கட்டும் திருப்பணிக்குக் கொடுக்குமாறு தனது மகன் ரெங்கேஸ்வரன், குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா்.

இதைத்தொடா்ந்து, அவரது குடும்பத்தினரும் வசூலான தொகை ரூ. 32 லட்சம் முழுவதையும் கோயில் திருப்பணி குழுவினரிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒப்படைத்தனா். பாலவேலாயுதம் குடும்பத்தினருக்கு திருப்பணிக் குழுவினா் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com