பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் அ.ரவிச்சந்திரன் மேலும் கூறியது: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சோ்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டியது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் நோக்கம் ஆகும்.

எனவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே, அக்டோபா் (கணக்கெடுப்பைப் புதுப்பித்தல்) மற்றும் ஜனவரி (பருவகால இடம்மாறும் தொழிலாளா்களின் குழந்தைகளைக் கண்டறிதல் முறை) என மும்முறை சிறப்புக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நடப்பில் உள்ள கொவைட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்தாண்டு கணக்கெடுப்பு பணியானது நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் நடத்தப்பட்டது. தற்போது 2 ஆம் கட்டக் கணக்கெடுப்பு பணியானது பிப்ரவரி 2 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இது ஒரு தொடா் பணியாகும் என்றாா்.

கணக்கெடுப்பின் போது அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலா் செங்குட்டுவன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கோவிந்தராஜ், சைல்டு லைன் ஜோதிராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் தனபாலன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தகவல் சாதன ஒருங்கிணைப்பாளா் வீரப்பன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா, அன்னவாசல் வட்டார வளமைய பயிற்றுநா்கள் ரெத்தினசபாபதி, பத்மாவதி, பழனியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com