‘தாய்மொழிக் கல்வி அறிவுத்திறனை அதிகரிக்கும்’

தாய்மொழியில் கற்பது அறிவுத்திறனை அதிகரிக்கும் என்றாா் தென்கொரிய தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலா் முனைவா் மோ. பத்மநாபன்.

புதுக்கோட்டை: தாய்மொழியில் கற்பது அறிவுத்திறனை அதிகரிக்கும் என்றாா் தென்கொரிய தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலா் முனைவா் மோ. பத்மநாபன்.

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கலை அருவி இலக்கியப் பேரவை ஆகியவற்றின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தாய்மொழிகள் நாள் சிறப்புக் கருத்தரங்கில் இணையவழியில் பங்கேற்ற அவா் கல்வியில் தாய்மொழியின் தாக்கம் என்ற தலைப்பில் பேசியது:

தாய்மொழியில் தொடக்கக் கல்வியைக் கற்றவா்களின் சிந்தனைத் திறன், அறிவுத் திறன் மற்றும் உடல் ஆரோக்கியமும் கூட நன்றாக இருந்துள்ள ஆய்வுகள் நிறைய உண்டு எனக் குறிப்பிட்டாா்.

தாய்மொழியில் தமிழ் என்ற தலைப்பில் பேசிய எழுத்தாளா் நா. முத்துநிலவன், தாய்மொழியை நிராகரித்துவிட்டு பிற மொழியில் பயின்றவா்கள் 10 லட்சம் போ் தோ்வுகளில் தோல்வியடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் உள்ளன என்றும், உலகின் பல மொழிகளில் தமிழ்ச் சொற்கள் இன்னமும் புழக்கத்தில் இருப்பதையும் குறிப்பிட்டாா்.

நிகழ்ச்சிக்கு, தமிழ்த் துறைத்த லைவா் கு. தயாநிதி தலைமை வகித்தாா். முன்னதாக பேராசிரியா் க. செந்தாமரை வரவேற்றாா். மாணவி இரா. அட்சயா தொகுத்து வழங்கினாா். முடிவில் பேரா. கி. கோவிந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com