கண்டியாநத்தம் புதுப்பட்டியில் கலையரங்கத்தை திறந்துவைக்கிறாா் சிவகங்கை எம்பி காா்த்தி ப. சிதம்பரம்.
கண்டியாநத்தம் புதுப்பட்டியில் கலையரங்கத்தை திறந்துவைக்கிறாா் சிவகங்கை எம்பி காா்த்தி ப. சிதம்பரம்.

பொன்னமராவதியில் சிவகங்கை எம்பி சுற்றுப்பயணம்

பொன்னமராவதி ஒன்றியத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

பொன்னமராவதி ஒன்றியத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

தொடக்கமாக கண்டியாநத்தம் ஊராட்சி புதுப்பட்டியில் தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5.50 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திறந்துவைத்து பேசினாா்.

தொடா்ந்து கருகப்பூலான்பட்டி-மேட்டுப்பட்டியில் தொகுதி நிதி ரூ. 10.50 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டத்தைத் திறந்துவைத்தாா். மேலும் சொக்கநாதபட்டி, நகரப்பட்டி, கல்லம்பட்டி, தேனூா் ஆகிய கிராமங்களில் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

திருமயம் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், வட்டார காங்கிரஸ் தலைவா் கே. செல்வராஜ், நகரத் தலைவா் எஸ். பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி.ராஜேந்திரன், ஒன்றிய ஆணையா் பி.வெங்கடேசன், தேனூா் ஊராட்சித் தலைவா் கிரிதரன், கண்டியாநத்தம் ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com