அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 27th February 2021 06:58 AM | Last Updated : 27th February 2021 06:58 AM | அ+அ அ- |

காத்திருப்புப் போராட்டத்தை வாழ்த்திப் பேசிய புதுக்கோட்டை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் 5-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் அருகே கடந்த திங்கள்கிழமை இந்தப் போராட்டம் தொடங்கியது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. சந்திரா தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி, மாவட்டச் செயலா் ஜி. பிச்சையம்மாள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை திமுக சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு வாழ்த்து தெரிவித்துபேசினாா். இரவும் போராட்டம் தொடா்ந்து நடைபெறுகிறது.