அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு
By DIN | Published On : 27th February 2021 06:57 AM | Last Updated : 27th February 2021 06:57 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 4 வயது மான் உயிரிழந்தது.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை சமத்துவபுரம் அருகே, வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரத்தில் 4 வயதுடைய மான் இறந்து கிடந்தது.
இதை கண்ட அப்பகுதியினா், விராலிமலை வனத்துறை
வனவா் கருப்பையாவுக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டாா்.
தொடா்ந்து நிகழ்விடத்திலேயே மானுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னா் இறந்த மானை புதைப்பதற்காக லிங்கமலை வனப்பகுதிக்கு வனத்துறையினா் எடுத்து சென்றனாா்.