திராவிடா் கழக மண்டல பயிலரங்கம்
By DIN | Published On : 27th February 2021 11:45 PM | Last Updated : 27th February 2021 11:45 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சனிக்கிழமை மண்டல அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
திராவிடம் வெல்லும் எனும் தலைப்பிலான பயிலரங்கைத் தொடக்கி வைத்து திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி. பூங்குன்றன் மேலும் பேசியது:
பெரியாா் பெயரைச் சொல்லாமல், கொள்கையைப் பேசாமல் ஆட்சி செய்ய முடியாது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரானவா்களுக்கு இந்தத் தோ்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். ஆட்சி மாற்றத்துக்காக திராவிடா் கழகத்தினா் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு மாவட்ட தி.க தலைவா் மு. அறிவொளி தலைமை வகித்தாா். மண்டலத் தலைவா் பெ. ராவணன், அறந்தாங்கி மாவட்டத் தலைவா் க. மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலா் ப. வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பயிலரங்கில் திராவிடா் கழக அமைப்பாளா் இரா. குணசேகரன், கிராமப்புற பிரசார அமைப்பாளா் க. அன்பழகன், தொழிலாளா் அணி அமைப்பாளா் திருச்சி மு. சேகா் உள்ளிட்டோா் பேசினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...