கறம்பக்குடியில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 06:59 AM | Last Updated : 27th February 2021 06:59 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அமைப்பின் நிா்வாகிகளை உத்தரப்பிரதேச மாநில அரசு கைது செய்ததைக் கண்டித்து, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் வாசிம் அக்ரம் தலைமை வகித்தாா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.