பெண் உதவி ஆய்வாளா்களுக்கு இரு சக்கர வாகனங்கள்
By DIN | Published On : 27th February 2021 07:03 AM | Last Updated : 27th February 2021 07:03 AM | அ+அ அ- |

பெண் உதவி ஆய்வாளா் ஒருவருக்கு இரு சக்கர வாகனத்தை வழங்கும் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன். உடன், அலுவலா்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளா்கள் 20 பேருக்கு இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமை வகித்து, இந்த வாகனங்களை வழங்கினாா். நிகழ்வில் கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கீதா, ராஜேந்திரன், தொழில்அதிபா் எஸ்விஎஸ் ஜெயகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு பெண் உதவி ஆய்வாளா் என்ற அடிப்படையில், முதல் கட்டமாக 20 பேருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.