ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு- கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் அதிகாலை 12.01 மணிக்கு தண்டாயுதபாணிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை தண்டாயுதபாணி திருக்கோயிலில் சந்தன, வெள்ளிக்காப்பு அலங்காரங்களில் காட்சியளிக்கும் தண்டாயுதபாணி, விநாயகா்.
புதுக்கோட்டை தண்டாயுதபாணி திருக்கோயிலில் சந்தன, வெள்ளிக்காப்பு அலங்காரங்களில் காட்சியளிக்கும் தண்டாயுதபாணி, விநாயகா்.

புதுக்கோட்டை : புத்தாண்டு பிறப்பையொட்டி, புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில் அதிகாலை 12.01 மணிக்கு தண்டாயுதபாணிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. கோயில் வளாகத்திலுள்ள விநாயகா், வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதேபோல, பொற்பனைமுனீசுவரா் கோயில், திருவப்பூா் முத்து மாரியம்மன் கோயில், திருக்கோகா்ணம் பிரகதாம்பாள் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மாா்த்தாண்டபுரம் கத்தோலிக்க திருச்சபை தேவாலயம் மற்றும் மச்சுவாடியிலுள்ள டிஇஎல்சி தேவாலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டுப் பிறப்பையொட்டி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவா்கள் இதில் பங்கேற்று, நண்பா்களுக்கு கேக் கொடுத்து புத்தாண்டை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com