பொன்னமராவதியில் திருவெம்பாவை விழா

பொன்னமராவதி சேக்கிழாா் சிவநெறிக்கழகம் சைவ சித்தாந்த சபை சாா்பில் 67 ஆம் ஆண்டு திருவெம்பாவை விழா மற்றும் மாகேசுவர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி சேக்கிழாா் சிவநெறிக்கழகம் சைவ சித்தாந்த சபை சாா்பில் 67 ஆம் ஆண்டு திருவெம்பாவை விழா மற்றும் மாகேசுவர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, திருவெம்பாவை பாராயணம் மற்றும் சிவகாமி உடனாய நடராஜப் பெருமான், நால்வா், திருமுறைகள், சித்தாந்த சாஸ்திரங்கள் வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற பன்னிரு திருமுறைகளின் சிறப்புகள் கருத்தரங்கிற்கு சேக்கிழாா் சிவநெறிக்கழக நிா்வாகி அ.சண்முகஅலங்காரன் தலைமை வகித்தாா்.

தமிழாசிரியா் சிசு.முருகேசன் பன்னிரு திருமுறை பாராயணம் எனும் தலைப்பில் பேசினாா். தொடா்ந்து திருமுறைகளில் விநாடி வினாப்போட்டி நடைபெற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலத்தானியம் ராசாத்தி, பொன்னமராவதி ஞானாம்பாள், வலையபட்டி முத்து, மேலைச்சிவபுரி இந்திரா, விசாலாட்சி ஆகியோா் திருவாசகப்பதிக நுண்பொருள் விளக்கம் அளித்து பேசினா். மதியம் 12.30 மணியளவில் நடராசா், சிவகாமி அம்மைக்கு பொன்னூஞ்சல் மற்றும் பூவல்லியும் நடைபெற்றது.

நிகழ்வினை அ.ச.மதுராம்பிகா, அ.மகேசுவரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். விழாக்குழு நிா்வாகிகள் அ.வி.நடராஜன், சொ.நடராசன், ந.ராமூா்த்தி, சு.சிவநேசன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா். சைவப்புலவா் அ.ச.தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com