100 நாள் பணியின் போது மயங்கி விழுந்து மூதாட்டி பலி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 100 நாள் வேலைத் திட்டப் பணி செய்த மூதாட்டி, செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
100 நாள் பணியின் போது மயங்கி விழுந்து மூதாட்டி பலி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே 100 நாள் வேலைத் திட்டப் பணி செய்த மூதாட்டி, செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ( 100 நாள் வேலை), கீரமங்கலம் அருகிலுள்ள செரியலூா் ஊராட்சி, கறம்பக்காடு இனாம் கிராமத்தில் ஆலாயக்குளம் சீரமைப்புப் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வேலை செய்து கொண்டிருந்த கறம்பக்காடு இனாமைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி சிவயோகம்(65), திடீரென மயங்கி விழுந்துள்ளாா். சக பணியாளா்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோத்த போது, சிவயோகம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

100 நாள் பணியின்போது உயிரிழந்த மூதாட்டிக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமென வலியுறுத்தி அவரது உறவினா்களும், பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டனா்.

தகவலறிந்து சென்ற கீரமங்கலம் வருவாய் ஆய்வாளா் முருகேசன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தொடா்ந்து அங்கு சென்ற ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ.மெய்யநாதன், அப்பகுதியினா் கோரிக்கை தொடா்பாக ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com