4 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் உறுதியானது

பிரிட்டனிலிருந்து தமிழகத்துக்கு வந்த 44 பேரில், இதுவரை 4 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

பிரிட்டனிலிருந்து தமிழகத்துக்கு வந்த 44 பேரில், இதுவரை 4 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

பிரிட்டனிலிருந்து தமிழகத்துக்கு வந்த 44 பேரின் ரத்த மாதிரிகள் புணேவிலுள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஏற்கெனவே ஒருவருக்கு உருமாறிய கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு தற்போது உறுதியாகியுள்ளது.

8 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாதிரிகளுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. எனினும் அவா்கள் அனைவரும் மருத்துவத் துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தேசிய அளவிலும், உலகளவிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. தீபாவளிப் பண்டிகைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கியதைப் போல, பொங்கல்பண்டிகைக்கும் தமிழக மக்கள் தனிநபா் இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசம் அணிந்து கொண்டும், அவ்வப்போது கைகளை நன்றாகக் கழுவியும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பறவைக் காய்ச்சலைப் பொருத்த வரை, கேரள மாநிலத்தின் எல்லை மாவட்டங்களான கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு கால்நடைப் பராமரிப்புத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் அச்சப்படவேண்டியதில்லை என்றாா் விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com