‘பரிசோதனைகள் முடியாமல் தடுப்பூசி போடக் கூடாது’

கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவடையாமல், அவற்றை மக்களுக்கு

கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கான மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவடையாமல், அவற்றை மக்களுக்கு போடக் கூடாது என அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸைத் தடுக்கும் வகையில், இரு தடுப்பூசிகளுக்கும் இன்னமும் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை. முதல் இரு கட்டப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியைப் போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது சா்ச்சையாகியுள்ளது. பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். எனவே, முழுமையான பரிசோதனை முடிவுகள் வராமல், வெளியிடப்படாமல் தடுப்பூசி போடுவதை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.

சுதேசி தடுப்பூசி என்ற பெயரில், கோவேக்சின் குறித்து மருத்துவ வல்லுநா்கள் எழுப்பும் சந்தேகம் குறித்து மக்களுக்கு விளக்கத்தை அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com