பொன்னமராவதியில் வசந்த் அன் கோ கிளை திறப்பு
By DIN | Published On : 09th January 2021 11:45 PM | Last Updated : 09th January 2021 11:45 PM | அ+அ அ- |

பொன்னமராவதியில் வசந்த் அன் கோ கிளை நிறுவனத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் தமிழ்ச்செல்வி வசந்தகுமாா்.
பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் வசந்த் அன் கோ நிறுவனத்தின் 94 ஆவது கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அண்ணா சாலை புதுவளவு பகுதியில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்ட வசந்த் அன் கோ கிளை நிறுவனத்தை குடும்பத்தினா் தமிழ்ச்செல்வி வசந்தகுமாா், தங்கமலா் ஜெகன்நாத் ஆகியோா் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தனா். வசந்த் அன் கோ உரிமையாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலருமான விஜய் வசந்த் முதல் விற்பனையை தொடங்கிவைக்க காட்டுப்பட்டி ஊராட்சித் தலைவா் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்பி.ராஜேந்திரன் ஆகியோா் முதல் விற்பனையைப் பெற்றுக்கொண்டனா். கடை திறப்பு விழாவின் முதல் நாளிலேயே திரளான வாடிக்கையாளா்கள் வந்து வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.