ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு 13, 14-இல் கரோனா பரிசோதனை

விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவா்களுக்கு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று பரிசோதனை (ஆா்டிபிசிஆா் ) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்திருப்பது: விராலிமலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) நடைபெற உள்ள

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா் மற்றும் உதவியாளா் ஆகியோா் தங்களின் ஆதாா் அட்டை, 3 புகைப்படங்களுடன் வந்து கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனைக்குப் பிறகு வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருப்போா் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டியில் அனுமதிக்கப்படுவா். பொதுமக்களும், மாடு பிடி வீரா்களும் உரிய கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com