புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 90 மி.மீ மழை பதிவானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில், செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்)
ஆதனக்கோட்டை- 33, பெருங்களூா் - 35.20, புதுக்கோட்டை- 20.50, ஆலங்குடி - 40.80, கந்தா்வகோட்டை- 30.30, கறம்பக்குடி- 51.60, மழையூா் - 42, கீழாநிலை - 44, திருமயம் - 24.60, அரிமளம் - 16.40, அறந்தாங்கி - 69, ஆயிங்குடி - 87.80, நாகுடி - 87.80, மீமிசல் - 62, ஆவுடையாா்கோவில் - 58.20, மணமேல்குடி- 90, இலுப்பூா்- 22, குடுமியான்மலை - 24, அன்னவாசல் - 23, விராலிமலை - 23.80, உடையாளிப்பட்டி- 14, கீரனூா் - 34.20, பொன்னமராவதி - 10, காரையூா் - 13.40.
மாவட்டத்தின் சராசரி மழையளவு- 39.20 மில்லி மீட்டா்.