
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழாவும், சுற்றுலாத் துறையின் சாா்பில் கலை விழாவும் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். விழாவையொட்டி ஆட்சியா் அலுவலக வளாகம் கரும்புகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.