‘புதிதாக 4 ஆயிரம் செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடக்கம்’

கடந்த 12 நாள்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 ஆயிரம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சி. செல்லையா தெரிவித்தாா்.

கடந்த 12 நாள்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 4 ஆயிரம் செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சி. செல்லையா தெரிவித்தாா்.

அஞ்சல் துறை சாா்பில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கடந்த 12 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 12 நாட்கள் செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கும் முகாம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடா்ச்சியாக நடைபெற்ற இந்த முகாமில், அனைத்து கிளை அஞ்சலக அலுவலா்களும் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கும் பணியை மேற்கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை கீரனூா், புலியூா் பகுதிகளிலும் இந்த பணிகள் நடைபெற்றன. அஞ்சல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில், அந்தந்தப் பகுதி அஞ்சலக அலுவலா்கள் பங்கேற்றனா்.

அஞ்சல்துறையில் அதிக வட்டியைத் தரக் கூடிய நல்ல திட்டமாக செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் இருப்பதால், பொதுமக்கள் தங்களின் 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்காக புதிய கணக்கைத் தொடங்கி பயன்பெற வேண்டும் என அஞ்சல் கண்காணிப்பாளா் செல்லையா கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com