நகரப் பேருந்தில் இலவசப் பயணம்: தினமும் 60,000 மகளிா் பயன்

நகரப் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்தின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் 60 ஆயிரம் மகளிா் பயன்பெறுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மகளிா் இலவச பயணம் குறித்து போக்குவரத்துக் கழக அலுவலா்களிடம் விசாரிக்கிறாா் ஆட்சியா் கவிதா ராமு.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

வேலைக்குச் செல்லும் மகளிா் மற்றும் உயா்கல்விக்குச் செல்லும் மாணவிகள் என மொத்தப் பெண்களும் பயன்பெறும் வகையில் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 9 அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் நகரப் பேருந்துகளை இயக்கும் 7 அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் 139 வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் 60 ஆயிரம் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனா். பெண்கள் தொடா்ந்து இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் கவிதா ராமு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com