இளையோா் திறன் மேம்பாடு கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி

உலக இளையோா் திறன் மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் திறன் மேம்பாடு குறித்த தொலைபேசி வழி சந்திப்பு மற்றும் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

உலக இளையோா் திறன் மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் திறன் மேம்பாடு குறித்த தொலைபேசி வழி சந்திப்பு மற்றும் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் கே. ஜோயல் பிரபாகா் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயதொழில் பயிற்சி நிறுவன பயிற்றுநா் முத்துக்குமரேசன், அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் ராமன் மற்றும் பயிற்றுநா் மாதவன் ஆகியோரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் அந்தோணி ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளா் மற்றும் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியா். தயாநிதி சாதனை புரிந்த இளையோரை வாழ்த்திப் பேசினாா்.

இதில் கரோனா பாதிப்புக்குப் பிந்தைய தொழிற்பயிற்சி வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திரா, இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையைச் சாா்ந்த சுமாா் 80 இளைஞா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளா் அன்பழகன் வரவேற்றாா். நிறைவாக நேரு யுவ கேந்திரா திட்ட உதவியாளா் ஆா். நமச்சிவாயம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com