நெல் கொள்முதல் நிலையங்களில் கூடாரம் அமைக்கக் கோரிக்கை

அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
அன்னவாசலில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைக்குள் புகுந்த மழைநீா்
அன்னவாசலில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைக்குள் புகுந்த மழைநீா்

அன்னவாசலில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் நெல் மூட்டைகள் பாதிப்படைவதால், அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

அன்னவாசல் வட்டார விவசாயிகள் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சாகுபடியை விற்று வருகின்றனா். இந்நிலையில், அன்னவாசல் பகுதிகளில் இயங்கி வரும் 10-க்கும் மேற்பட்ட அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 4 நாட்களாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வந்து கொள்முதல் நிலைய வளாகத்தில் அடுக்கிவைத்திருந்தனா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக சனிக்கிழமை இரவு பெய்த மழையால் நெல் கொள்முதல் நிலைய வளாகங்களில் கூடாரம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com