விராலிமலை ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடியைத் தாண்டியது ஆடு விற்பனை

விராலிமலை ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை ரூபாய் 1 கோடியைத் தாண்டியது.
விராலிமலை ஆட்டுச்சந்தையில் விற்பனைக்கு வந்த ஆடுகள்.
விராலிமலை ஆட்டுச்சந்தையில் விற்பனைக்கு வந்த ஆடுகள்.

விராலிமலை ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை ரூபாய் 1 கோடியைத் தாண்டியது.

வாரம்தோறும் திங்கள்கிழமை விராலிமலையில் கூடும் வாரச்சந்தையில் ஆடுகள் வாங்க, விற்க என பரபரப்பாக நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூரில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள் இந்த நிலையில் பொதுமுடக்கம் காரணமாக கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று காலை வாரச்சந்தை கூடியது நீண்ட நாட்களுக்கு பிறகு கூடிய சந்தை என்பதாலும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகை பக்ரீத் நெருங்கி வருவதாலும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 

பண்டிகை காலமென்பதால் ஆடுகள் விலை சற்று அதிகமாக விற்கப்பட்டது. பலர் விராலிமலை வந்து தங்கி இருந்து இன்று காலை ஆடுகள் வாங்க சந்தைக்கு வந்தனர். ஆடுகளின் விலை கிடுகிடு என உயர்ந்தது இதனால் வெளியூரிலிருந்து வந்தவர்கள் ஆடுகள் வாங்க முடியாமல் திணறினர். மேலும் விராலிமலை பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருபவர்கள் கூறுகையில், ஆட்டிறைச்சி ஒரு கிலோ 700 க்கு விற்று வரும் நிலையில் தற்போதைய விலை ஏற்றத்தால் ஒரு கிலோ ஆயிரத்திற்கும் அதிகமாக விற்றால் தான் கட்டுப்படியாகும் என்றும் இதனால் ஆடுகளை அதிக விலை கொடுத்து வாங்கினால் விற்க முடியாத சூழல் நிலவுவதாகம் தெரிவிக்கின்றனர்.

சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த சந்தையில் வந்து ஆடுகளை விற்றும் வாங்கியும் செல்லும் நிலையில் தற்போது பண்டிகை, திருவிழா காலமென்பதால் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அப்பகுதி பெரும்பாலான கோயில்களில் கிடா வெட்டி பூஜை நடத்துவார்கள். 

இதனால் ஆடுகளின் தேவை என்பது தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதும் அதேபோல் விலையேற்றமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com