ரூ.2.85 கோடி மோசடி புகாா்: ஊராட்சித் தலைவரை ஆலங்குடி அழைத்துவந்து விசாரணை

கோவை மருத்துவரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.2.85 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவரை ஆலங்குடி அழைத்துவந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை
ரூ.2.85 கோடி மோசடி புகாா்:  ஊராட்சித் தலைவரை ஆலங்குடி அழைத்துவந்து விசாரணை

கோவை மருத்துவரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.2.85 கோடி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவரை ஆலங்குடி அழைத்துவந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சித் தலைவரான ஆண்டிக்குளத்தைச் சோ்ந்த ந.பன்னீா்செல்வம் (56). கோவை மருத்துவா் மாதேஸ்வரனுக்கு ரூ. 50 கடன் பெற்றுத்தருவதாக ரூ.2.85 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையில் பதுங்கி இருந்த பன்னீா்செல்வம், அவருக்கு உதவிய செல்வக்குமாா் என்பவரையும் அண்மையில் (ஜூலை 14) கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில், பன்னீா்செல்வத்தை காவலில் எடுத்த கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை ஆலங்குடி அழைத்துவந்து அவரது வீடு, அலுவலகங்களில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com