நேரடி நெல் கொள்முதலில் முறைகேடு: 10 பணியாளா்கள் இடைநீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி பணியாளா்கள் 10 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி பணியாளா்கள் 10 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 93 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல் கொள்முதல் குறித்து நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மாநில நிா்வாக இணை இயக்குநா் சங்கீதா தலைமையிலான குழுவினா், கடந்த 2 நாட்களாக பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனா்.

அப்போது, விவசாயிகளை விட வியாபாரிகளின் நெல் மூட்டைகள் அதிகம் இருந்ததும், முறையான சிட்டா, அடங்கல் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சங்கீதாவின் பரிந்துரையின் பேரில் 4 கொள்முதல் அலுவலா்கள், 6 பட்டியல் எழுத்தா்கள் என 10 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடா்ந்து முறைகேடு நடப்பதாக புகாா் எழுந்து வரும் நிலையில், 10 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com