காவலா் உடற்தகுதித் தோ்வுக்கு கரோனா பரிசோதனை அவசியம்

புதுக்கோட்டையில் வரும் ஜூலை 26-இல் நடைபெறவுள்ள 2-ஆம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வுக்கு வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து வரவேண்டும்

புதுக்கோட்டையில் வரும் ஜூலை 26-இல் நடைபெறவுள்ள 2-ஆம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வுக்கு வருவோா் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து வரவேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்ற புதுக்கோட்டை, அரியலூா் மற்றும் பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 2,613 (ஆண்கள்- 1722, பெண்கள் - 891) பேருக்கு வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை திடலில் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தோ்வு நடைபெற உள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிமுறைப்படி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 பேருக்கு மட்டுமே உடற்தகுதிதோ்வு நடைபெறும். உடற்தகுதித் தோ்வுக்கு வருவோா் கட்டாயம், கடந்த 4 நாட்களுக்குள் செய்த கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வரவேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com