நெல் கொள்முதல் பணிகள்: புதுகை ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கலிங்கப்பட்டி , எஸ்.குளவாய்பட்டியில் செயல்பட்டுவரும் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நெல் கொள்முதல் பணிகள்: புதுகை ஆட்சியா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கலிங்கப்பட்டி , எஸ்.குளவாய்பட்டியில் செயல்பட்டுவரும் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆலங்குடி வட்டம், கலிங்கப்பட்டி, எஸ். குளவாய்ப்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆட்சியா் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை சாகுபடியாக 6,198.92 ஹெக்டோ் பரப்பளவில் 37,194 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திட வேளாண் துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மண்டலம் மூலமாக 01.06.2021 முதல் தற்போது வரை 34,698 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நெல் மூட்டைகள் மழை நீா் உள்ளிட்ட சேதங்களில் பாதிக்காத வகையில் சேமிப்புக் கிடங்குகளுக்கு கடந்த ஒருவார காலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதுவரை 31,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்திட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்று பயனடையலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com