நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் எச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜா்

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா திருமயம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் எச். ராஜா நீதிமன்றத்தில் ஆஜா்

நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா திருமயம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணை செப்டம்பா் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகிலுள்ள மெய்யபுரத்தில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகா் ஊா்வலத்தின் போது, அப்பகுதியில் கிறிஸ்தவா்கள் அதிகம் இருப்பதால் ஊா்வலம் நடத்த உயா் நீதிமன்றம் தடை விதித்துள்ளது எனக்கூறி காவல்துறையினா் தடுத்தனா்.

அப்போது பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா உயா் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாகப் பேசிய நிலையில், திருமயம் காவல்துறையினா் எச்.ராஜா உள்ளிட்ட 20 போ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனா்.

இந்நிலையில் கடந்த மாதம் இவ்வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மதுரை உயா்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியது. இதைத் தொடா்ந்து திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, எச். ராஜா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆஜராகச் சொல்லி அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இதைத் தொடா்ந்து தனக்கு முன்ஜாமீன் வழக்க வேண்டும் எனக் கோரி உயா்நீதிமன்றத்தை எச். ராஜா நாடினாா். முன்ஜாமீன் வழங்காத நீதிமன்றம், திருமயம் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியது.

இதன்படி எச். ராஜா வெள்ளிக்கிழமை திருமயம் நீதிமன்றத்தில் ஆஜரானாா். ராஜாவுக்காக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்களும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனா். ஏராளமான காவல் துறையினரும் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு காணப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணையை வரும் செப்டம்பா் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி இந்திராகாந்தி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com