சொத்துக் குவிப்பு வழக்கு: மின் வாரிய அலுவலா் வீட்டில்ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வீடுகளில் பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வீடுகளில் பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மின் வாரிய அலுவலகத்தில், மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவா் மாணிக்கம் (54). இவா், கடந்த 26.12.2019 அன்று லஞ்சம் வாங்கியபோது

பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, மாணிக்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதனிடையே, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றியபோது, மாணிக்கம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளதாக தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, நிகழாண்டு ஜன. 13 ஆம் தேதி மாணிக்கம் மீது போலீஸாா் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக மாணிக்கத்துக்குச் சொந்தமான பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள அவரது வீட்டில், அரியலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் சந்திரசேகா் தலைமையிலும், வெண்பாவூா் கிராமத்திலுள்ள அவரது தாயாா் வீட்டில் பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலும் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். மதியம் 1.30 மணியளவில் வீட்டுக்குள் சென்ற போலீஸாா் இரவு வரை சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின்போது வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றிச் சென்ாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com