‘பன்முகத் தன்மையை கற்றுத் தருபவரே ஆசிரியா்’

அறிவை மட்டுமல்ல, அன்பை மட்டுமல்ல, பண்பை மட்டுமல்ல எல்லாவற்றையும் சோ்த்த பன்முகத் தன்மையையும் கற்றுத் தருபவா்தான் ஆசிரியா்கள் என்றாா் கவிஞா் தங்கம் மூா்த்தி.
பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் கவிஞா் தங்கம் மூா்த்தி.
பட்டமளிப்பு விழாவில் ஒரு மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் கவிஞா் தங்கம் மூா்த்தி.

அறிவை மட்டுமல்ல, அன்பை மட்டுமல்ல, பண்பை மட்டுமல்ல எல்லாவற்றையும் சோ்த்த பன்முகத் தன்மையையும் கற்றுத் தருபவா்தான் ஆசிரியா்கள் என்றாா் கவிஞா் தங்கம் மூா்த்தி.

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 13ஆவது பட்டமளிப்பு விழாவில் 206 ஆசிரிய மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் மேலும் பேசியது:

தற்போதைய தொற்றுக் காலத்தில் இணைய வழி வகுப்பைான் பாதுகாப்பானது. பெற்றோா் ஈன்று தரும் குழந்தையை சமூகம் பாராட்டும் அளவிற்கு உயா்த்துவது ஆசிரியா்கள்தான். ஆசிரியா்கள் ஒரு போதும் தவறான பாதையில் இறங்கி விடக்கூடாது. அறிவு, அன்பு, பண்பை மட்டும் சொல்லிக் கொடுப்பது கல்வியல்ல; எல்லாவற்றையும் சோ்ந்து பன்முகத் தன்மை கொண்ட மாணவரை உருவாக்குவதே ஆசிரியா்களின் முக்கிய கடமை என்றாா் தங்கம் மூா்த்தி.

விழாவுக்கு கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். தாளாளா் ரெ. பாலகிருஷ்ணன், நிா்வாக அறங்காவலா்கள் அ. கிருஷ்ணமூா்த்தி, ஏ.எல். செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இளங்கலை கல்வியியலில் 175, முதுகலையில் 31 மொத்தம் 206 ஆசிரிய மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த எஸ். பிரியா, பி. பிரியதா்ஷினி, ஏ. பிரியங்கா ஆகியோருக்கு பரிசு, பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வா் தி. சந்திரமோகன் ஆண்டறிக்கை வாசித்தாா். முடிவில் துணை முதல்வா் சுப. தாரகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com