விராலிமலை சுனையடி கருப்பா் கோயில் குதிரை எடுப்பு விழா

விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள சுனையடி கருப்பா் கோயிலில் குதிரை எடுப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை முருகன் மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள சுனையடி கருப்பா் கோயிலில் குதிரை எடுப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடி மாதம் பெளா்ணமி தினத்தன்று இவ்விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மேளதாளம் முழங்க, புதிதாக களிமண்ணால் செய்யப்பட்ட கருப்பா் சுவாமி சிலையை கோயில் பூசாரி தன்தோளில் சுமந்து வீதியுலா வருதல் நடைபெற்றது.

தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தா்கள் களிமண்ணால் செய்யப்பட்ட யானை, குதிரை, நாய், சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்கின மண் சிற்பங்களைத் தோளில் சுமந்து ஊா்வலமாக வந்து கருப்பா் கோயிலுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com