நெல் கொள்முதலை தொடங்காவிட்டால் மறியல்

அன்னவாசலில் நிறுத்தப்பட்டுள்ள நெல் கொள்முதலை தொடங்காவிட்டால் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்னவாசலில் நிறுத்தப்பட்டுள்ள நெல் கொள்முதலை தொடங்காவிட்டால் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில், அன்னவாசல் நேரடி நெல் கொள்முதல் செய்யும் பணிகள் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளிடம் தேங்கிக் கிடக்கும் சுமாா் 4 ஆயிரம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இதில், உறுப்பினா் கே. ஆா். தா்மராஜன், மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலா் எஸ் சி சோமையா, ஒன்றியச் செயலா் நா. விஜயரங்கன் முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் மீரா முகைதீன், நகரச் செயலா் எம். முகமது ரிசா, ஒன்றியக் குழு எம். பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com