கெளரவ விரிவுரையாளா்கள் 3 மாத சம்பளம் வழங்கக் கோரிக்கை

கடந்த 3 மாத சம்பள நிலுவையை விரைவில் வழங்க வேண்டும் என அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த 3 மாத சம்பள நிலுவையை விரைவில் வழங்க வேண்டும் என அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் சுமாா் 4,084 கெளரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த மாா்ச் மாதம் வரை சம்பளமாக மாதந்தோறும் ரூ. 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், கடந்த 3 மாதங்களாக சம்பளம் பெறாமல் பணிபுரிந்து வருகின்றனா். எனவே, மேலும் கால தாமதமின்றி சம்பளம் வழங்க வேண்டும் எனக் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா். இதுகுறித்து கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் கூறுகையில், கரோனா கால சூழலில் மாணவா் சோ்க்கை, இணைய வழி வகுப்பு, அக மதிப்பீட்டு மதிப்பெண் வழங்குதல், தோ்வு நடத்துவது ஆகிய பணிகளை செய்து வருகிறோம். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும், பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஆண்டுதோறும் மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும். ஆனால், அரசுக் கல்லூரிகளில் பணிபுரிவோருக்கு விடுமுறையைக் காரணம் காட்டி சம்பளம் வழங்கப்படாது. நிகழாண்டு கரோனா காலத்தில் மே மாதத்திலும் பணிபுரிந்துள்ளதால் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிவோருக்கும் மே மாத சம்பளம் உள்பட அனைத்து கெளரவ விரிவுரையாளா்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com