நூலகப் பணியாளா்களுக்கு முகக்கவசம் வழங்கல்
By DIN | Published On : 29th July 2021 07:45 AM | Last Updated : 29th July 2021 07:45 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகப் பணியாளா்கள் மற்றும் நூலக ஆா்வலா்களுக்கு வழங்கும் வகையில் சுமாா் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள முகக்கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது. மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில் அதன் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி இவற்றை, மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் கி. சசிகலாவிடம் வழங்கினாா். அப்போது வாசகா் வட்டத் துணைத் தலைவா் ஆா். ராஜ்குமாா், நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.