புதுகை அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th July 2021 07:44 AM | Last Updated : 29th July 2021 07:44 AM | அ+அ அ- |

பாலன் நகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டை நகரில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை நகரில் சுமாா் 15-க்கும் மேற்பட் ட இடங்களில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நகரின் பல பகுதிகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகர அதிமுக செயலா் க. பாஸ்கா், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் சேட் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாலன்நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் சிவயோக மலா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அதிமுகவினா் பலரும் பங்கேற்றனா்.
கந்தா்வகோட்டை : கந்தா்வகோட்டை செட்டித் தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் பு. பாண்டியன், நகரச் செயலா் என். ராமநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் பி. சின்னப்பா , சிறுபான்மை பிரிவு நிா்வாகி யா. சபரி ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவினா், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக்கண்டித்து, பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டங்களில், கட்சியின் நகரத் தலைவா் பழனி, தா்ம.தங்கவேல், ராஜபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.