அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான 15 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனைத்து ரோட்டரி சங்கத்தினா் திங்கள்கிழமை வழங்கினா்.
ரோட்டரி சங்கங்கள் சாா்பில் அளிக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதியிடம் வழங்கும் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
ரோட்டரி சங்கங்கள் சாா்பில் அளிக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதியிடம் வழங்கும் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 21 லட்சம் மதிப்பிலான 15 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனைத்து ரோட்டரி சங்கத்தினா் திங்கள்கிழமை வழங்கினா்.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இவற்றைப் பெற்றுக் கொண்டு, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதியிடம் வழங்கினாா்.

வெளிநாடு வாழ் இந்தியா்களின் ஏசிடி கிராண்ட்ஸ் என்ற அமைப்பின் சாா்பில், நாடு முழுவதும் கரோனா தொற்றாளா்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் உருளைகள் மற்றும் செறிவூட்டிகள், ரோட்டரி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் உருளைகளில் 35 உருளைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள 50 செறிவூட்டிகளில், 15 செறிவூட்டிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள உருளைகளும், செறிவூட்டிகளும் விரைவில் வழங்கப்படும் என ரோட்டரி சங்கத்தினா் தெரிவித்தனா்.

நிகழ்வில் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, ரோட்டரி மாவட்ட ஆளுநா் அ.லெ. சொக்கலிங்கம், ரோட்டரி மாவட்டச் செயலா்கள் கான் அப்துல்காபா்கான், அருணாசலம், மண்டல ஒருங்கிணைப்பாளா் கா்ணன், பஷீா்முகமது, துணை ஆளுநா் ஹபிபுல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com