‘புதுக்கோட்டை நகரில் மீண்டும் முத்துலட்சுமி நினைவு மருத்துவமனை செயல்படும்’

புதுக்கோட்டை நகரில் மீண்டும் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் மீண்டும் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா தெரிவித்தாா்.

புதுக்கோட்டை அருகே முள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பிறகு, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக விளங்கிய டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை புதுக்கோட்டை ஊரக நலத்துறை இணை இயக்குநா் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.

நகரில் இம்மருத்துவமனை செயல்பாட்டில் இல்லாததால, ஏற்கெனவே நீண்ட காலமாக மருத்துவவசதியைப் பெற்று வந்த நகரப் பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாயினா்.

இதையடுத்து முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனை வளாகத்தில் காலியாக இருந்த கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு, மீண்டும் மருத்துவமனையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டன. எனினும், செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில், இந்த மருத்துவமனையைத் திறப்பது குறித்து புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சீரமைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து மருத்துவ அலுவலா்களுடன் ஆலோசனை செய்த அவா், உள்நோயாளா் மற்றும் புறநோயாளா் பிரிவுகளுடன் இம்மருத்துவமனையை விரைவில் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவத் துறை அலுவலா்களை கேட்டுக் கொண்டாா்.

இதே வளாகத்தில் எக்ஸ்ரே, இசிஜி, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை வசதிகள் ஒரு மாதத்துக்குள் ஏற்படுத்தப்படுவதுடன், ஏற்கெனவே செயல்பட்டு வரும் மனநல பிரிவு, காசநோய், சித்தா, தொற்றா நோய்கள் பிரிவுகளும் மேம்படுத்தப்படும் என்றாா் முத்துராஜா.

ஆய்வின்போ, ஊரக சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் ராமு, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் ஆா்.காா்த்திக் தெய்வநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com