ஆலங்குடி அருகே அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை கோரி புகாா்
By DIN | Published On : 11th June 2021 02:56 AM | Last Updated : 11th June 2021 02:56 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பெண் ஊராட்சித் தலைவா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவரைக் கைது செய்யக்கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.
ஆலங்குடி அருகே பட்டியல் வகுப்பைச் சோ்ந்த மாங்கோட்டை ஊராட்சித் தலைவரான பிரேமா குறித்தும், மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த துணைத் தலைவா் குறித்தும் அப்பகுதியைச் சோ்ந்தவா் இழிவாகப் பேசி சமூக ஊடகங்களில் அவதூறாகப் பதிவிட்டாராம். தகவலறிந்த பிரேமா, கிராம மக்கள் அவதூறு பரப்பியவரைக் கைது செய்யக்கோரி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.